தி.மலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையை வரும் 25-ம் தேதி திறக்க வேண்டும் என விவசாயி கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தி.மலை மாவட்டம் சாத்தனூர் அணையை திறப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் தண்டராம் பட்டு அடுத்த வாணாபுரத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் பேசும்போது, “சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 111 அடியை கடந்துள்ளது. அணையை வரும் 25-ம் தேதி திறக்க வேண்டும். இடைவெளி விட்டு 90 நாட் களுக்கு கடைமடை ஏரி நிரம்பும் வரை, தண்ணீர் திறந்து விட வேண்டும். மேலும், ஏரிகளுக்கு ஒதுக்கப்படும் தண்ணீர் அளவை சரியாக கணக் கிட்டு வழங்க வேண்டும். இதற்கு முன்ன தாக, நீர்வரத்துக் கால்வாய்களை தூர்வாரி பாதையை ஒழுங்குப்படுத்த வேண்டும்” என்றனர்.
இதற்கு, பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறும்போது, “அனைத்து ஏரிகளும் முழுமையாக நிரம்பும் வகையில் தண்ணீர் திறந்துவிடப்படும். நீர்வரத்துப் பாதையில் தடை ஏற்பட்டால், உடனடியாக அகற்றப்படும். தண்ணீர் திறப்பது குறித்து தி.மலை ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற வுள்ளது. அப்போது, அணையை திறக்கும் தேதி முடிவு செய்யப்பட்டு, தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். அதனடிப்படையில் தண்ணீர் திறந்துவிடப்படும்” என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago