வாணியம்பாடி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வரும் 15-ம் தேதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தகவல்

By செய்திப்பிரிவு

வாணியம்பாடியில் இயங்கி வரும் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் நடப்பாண்டுக்கான நேரடி சேர்க்கைக்கான விண்ணப் பங்கள் வரும் 15-ம் தேதி வரை வரவேற்கப்படுவதாக திருப்பத் தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், "திருப்பத்தூர் மாவட்டம் வாணியம் பாடியில் இயங்கி வரும் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் நடப் பாண்டுக்கான சேர்க்கை தொடர்ந்து நடந்து வருகிறது. வரும் 15-ம் தேதி வரை நேரடி சேர்க்கைக்கான விண்ணப் பங் கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண் மற்றும் பெண் இருபாலரும் ரெப்பிரிஜிரேஷன், ஏர் கண்டிஷனர் டெக்னீஷியன், மெக்கானிக் மோட் டார் வெய்க்கிள், லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர் மெக்கானிக், நவீன ஆடை வடிவமைப்பு தொழில் நுட்பம் ஆகிய பயிற்சி பெற தகுதி யானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அதேபோல, 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண் மற்றும் பெண் இருபாலரும் தோல் பொருள் உற்பத்தியாளர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான வயது வரம்பு ஆண்களுக்கு 40 வயது வரை, பெண்களுக்கு வயது உச்ச வரம்பு இல்லை. பயிற்சிக்கான கட்டணம் இலவசம்.

பயிற்சியில் சேரும் பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ.750 உதவித்தொகையாக வழங்கப் படும். இது தவிர இலவச சீருடை, அதற்கான தையற்கூலி, விலை யில்லா பாடப் புத்தகங்கள், மிதி வண்டி, மடிக்கணினி, வரைபடக் கருவிகள், பேருந்து பயண அட்டை ஆகியவை வழங்கப்படும்.

வாணியம்பாடி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2 கட்டமாக நடைபெற்ற சேர்க்கை யின் முடிவில், காலியாக உள்ள தொழிற்பயிற்சி பிரிவுகளுக்கு வரும்15-ம் தேதி வரை நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளதால், விருப்பமுள்ள இருபாலரும் அரசின்சலுகைகளுடன் எந்தவித கட்டண மும் இல்லாமல் தொழிற் பயிற்சி பெற அசல் சான்றிதழ்களுடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரில் சென்று தங்களுக்கான விருப்பமுள்ள பாடப் பிரிவு களை தேர்ந்தெடுத்து சேரலாம்.

இது தொடர்பாக கூடுதல் விவரம் தேவைப்படுவோர் 98438-90557, 73390-55830, 79045-60018, 94790-55684 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ள லாம்’’ என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்