திருவண்ணாமலையில் கரோனா விதிமுறைகளை பின்பற்றி ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு முகாம் நேற்று தொடங்கியது.
சென்னை மண்டல ராணுவ ஆள் சேர்ப்பு தலைமை அலுவலகம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பில், இந்திய ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு முகாம் நேற்று தொடங்கியது. அருணை பொறியியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நேற்று தொடங்கிய முகாம் வரும் 26-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 11 மாவட்டங்களுடன் புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர்கள் சுமார் 25 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கரோனா விதிமுறைகளை பின்பற்றி தினசரி 2 ஆயிரம் பேரை தேர்வில் பங்கேற்க அழைத்துள்ளனர். நள்ளிரவில் தொடங்கும் தேர்வு காலை 8 மணியளவில் நிறைவு பெறுகிறது. கரோனா தொற்று இல்லை என்று சான்று பெற்று வந்த இளைஞர்கள் மட்டுமே தேர்வு வளாகத்துக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago