பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "திருப்பூர் மாநகரில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்துக்காக ரூ.1000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையம், வணிக வளாகம், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அத்திக்கடவு-அவிநாசி திட்டம், கொடிவேரி கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்தோம். போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
திருப்பூர் மாநகராட்சியை பொறுத்தவரை, பொதுமக்கள் கேட்டவுடன் குடிநீர் இணைப்பு கிடைக்கும் வகையில் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்குள்ளவர்கள் தொழில் மற்றும் சொந்த வேலை நிமித்தமாக, கோவை விமான நிலையம் செல்லும் வரை எந்தவித குறுக்கீடும் இல்லாத ‘எக்ஸ்பிரஸ் வே’ என்ற மேம்பாலப் பாதையை அமைக்க ஆலோசிக்க உள்ளோம். இது, தொழில்துறையினர் உற்பத்தி செய்யும் பொருட்களை கொண்டு செல்ல வழிவகுக்கும். 'ஸ்மார்ட் சிட்டி' திட்டப் பணிகள் முழுமையடைந்ததும், அமெரிக்காவின் வாஷிங்டன் நகரம்போல திருப்பூர் மாநகரம் மாறும்" என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago