பொதுமக்களின் அத்தியாவசிய பிரச்சினைகளில் அலட்சியம் காட்டுவதா கக் கூறி, திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து திமுகவி னர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே மத்திய மாவட்ட திமுக சார்பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மத்திய மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் தலைமை வகித்தார். இதில் பங்கேற்றவர்கள் பேசும்போது, "திருப்பூர் மாநகர் முழுவதும் தேங்கிக் கிடக்கும் குப்பை, சாக்கடைக் கழிவுகள் முறையாக அகற்றப்படுவதில்லை. முறையற்ற குடிநீர் விநியோகத்தால், பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவுவது மக்களை அச்சத்துக்கு உள்ளாக்கியுள்ளது.
‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் தரமற்ற முறையில் நடைபெற்றுவரும் பணிகளை சீர் செய்ய வேண்டிய மாநகராட்சி நிர்வாகம், ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது. பொதுமக்களின் அத்தியாவசிய பிரச்சினைகளில் மாநகராட்சி நிர்வாகம் அலட்சியமாக செயல்படுகிறது" என்றனர்.
தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே.டி.மு.நாகராசன், வடக்கு மாநகர பொறுப்பாளர் தினேஷ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. கோவிந்தசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago