மகன் கண்முன் தாய் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

திருப்பூர் முருகம்பாளையத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (48). இவரது மனைவி அருக்காணி (45). இவர்களுடைய மகன் சுப்பிரமணி (23). நேற்று முன்தினம் இரவு சுப்பிரமணி, அருக்காணி ஆகியோர் இடுவம்பாளையம் பகுதியில் இருந்துதிருப்பூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டி ருந்தனர். முருகம்பாளையம் கோடீஸ்வரர் சந்திப்பை கடக்கும்போது, முன்னே சென்றுகொண் டிருந்த லாரியை இடதுபுறமாக கடக்க முயன்றுள்ளார்.

அப்போது சாலையோரத்தில் சிலர் பேசிக் கொண்டிருந்ததால் வாகனத்தை நிறுத்தியுள்ளார். மண் சிதறிக் கிடந்ததால், வாகனம்சறுக்கி வலது புறமாக இருவரும்விழுந்தனர். இதில், அதிர்ஷ்டவசமாக சுப்பிரமணி உயிர்தப்பினார். ஆனால், லாரியின் பின்சக்கரத்தில் சிக்கி அருக்காணி உயிரிழந்தார்.

சம்பவ இடத்துக்கு வீரபாண்டி போலீஸார் சென்று, அருக்காணியின் சடலத்தை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். லாரி ஓட்டுநர் மாடசாமியை போலீஸார் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்