தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், திருப்பூர் சாய ஆலைகள் சங்கம், பின்னலாடைத் துணி உற்பத்தியாளர்கள் சங்கம், சிம்கா மற்றும் டெக்பா ஆகிய சங்கங்கள் பங்கேற்றன. உயர்ந்துவரும் பஞ்சு விலையை கட்டுப்படுத்த, கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு, நியாயமான விலை ஒரு முறை நிர்ணயித்தால் 3 மாதங்களுக்கு விலையில் மாற்றம் செய்யாமல் இருக்குமாறு அறிவுறுத்த வேண்டும். நூற்பாலைகள் உற்பத்தி செய்யும் நூலை, முன்னுரிமை அடிப்படையில் உள்நாட்டு பின்னலாடை உற்பத்திக்கு தேவையான அளவு தட்டுப்பாடின்றி அளிக்க வேண்டும். உள்நாட்டு தேவைக்குபோக, உபரியாக உள்ள நூலை மட்டும் ஏற்றுமதி செய்ய வேண்டும். இந்த நெருக்கடியான சூழ்நிலையில் பாரம்பரியமிக்க திருப்பூர் பின்னலாடைத் தொழிலை காக்க மத்திய அரசு உடனடியாக தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago