குள்ளனூர் மாரியம்மன் கோயிலில் 5-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி பக்தர்கள் அம்மனுக்கு பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடினர்.
போச்சம்பள்ளி அருகில் உள்ள குள்ளனூரில் மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் புதியதாக கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்தவர்கள் பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு, அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட நாட்களில் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு வருகின்றனர்.
கோயில் கட்டப்பட்டு 5-ம் ஆண்டு நேற்று தொடங்கியதை யொட்டி, திருவிழா நடைபெற்றது. காலையில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பம்பை மேளங்கள் முழங்க அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதையடுத்து கோயிலில் 5-ம் ஆண்டு விழாவையொட்டி, அம்மனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறும் வகையில் கேக் வெட்டி பக்தர்கள் கொண்டாடினர். இதில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago