கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டம் 877 மாற்றுத்திறனாளிகள் கைது

By செய்திப்பிரிவு

விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அரசுஅலுவலகங்களில் குடியேறும்போராட்டத்தில் ஈடுபட்ட 877 மாற்றுத்திறனாளிகள் நேற்று கைது செய்யப்பட்டனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கும் உதவித் தொகையை மற்ற மாநிலங்களில் வழங்குவது போல் குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். தனியார் வேலை வாய்ப்பில் 5 சதவீதம் பணி ஒதுக்கீடுவழங்க வேண்டும் உள்ளிட்டகோரிக்கை களை வலியு றுத்தி அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடுஅனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, நேற்று கடலூரில் கூடிய மாற்றுத்திறனாளிகள் ஆட்சியர் அலுவலகம் செல்ல முயன்றனர். 80 பேரை போலீஸார் கைது செய்தனர். பண்ருட்டியில் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம் ஆட்சியர் அலுவ லகத்திற்குள் செல்ல முயன்றோர், விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நுழைய முயன்றோர் உட்பட மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 475 மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப் பட்டனர்.

இதே போல கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 222 பேரை போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்