என்எல்சியில் நடைபெற்ற பணி நியமன தேர்வை ரத்து செய்யக் கோரி நெய்வேலியில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நெய்வேலி பெரியார் சிலை அருகில் கடலூர் மாவட்ட திமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்ஆர்கே பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். கடலூர் மேற்கு மாவட்ட திமுகசெயலாளர் கணேசன், எம்எல்ஏக் கள் நெய்வேலி சபா ராஜேந்திரன், புவனகிரி சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
இதில் கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பேசியது:
நெய்வேலியில் என்எல்சி நிறுவனத்தின் வளர்ச்சிக்காக சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர் கள் வீடு, நிலங்களை கொடுத்துள்ள னர்.
இதனால் என்எல்சி நிறுவ னம் நவரத்னா அந்தஸ்து பெறு வதற்கு முக்கிய காரணமாக இருந் துள்ளனர். என்எல்சி நிறுவனத்தில் தொடர்ச்சியாக கடந்த ஐந்து ஆண்டுகளாக வடமாநில இளைஞர்களை பணியில் அமர்த்தி வருகின்றனர். தற்போது நடைபெற்ற பொறியாளர்கள் நேர்முக தேர்வில் 1,582 பேர் கலந்து கொண்டனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 8 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும். அதில் தமிழக இளைஞர்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
இல்லாவிட்டால் அனைத்துகட்சியினர் மற்றும் தொழிற்சங்கத் தினரை ஒருங்கிணைந்து மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
முன்னாள் எம்எல்ஏக்கள் ஐயப்பன், இளபுகழேந்தி, தொமுச பேரவை இணைபொதுச் செயலாளர் சுகுமார், பேரவைதுணை செயலாளர் வீரராமச்சந் திரன், என்எல்சி தொமுச பொரு ளாளர் குருநாதன், என்எல்சியில் அப்பரண்டிஸ் முடித்தவர்கள் உள் ளிட்ட பலர் கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago