நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலுக்கு விருதுநகர் மாவட் டத்தில் கூடுதலாக 623 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.
சட்டப் பேரவைத் தேர்தலுக்காக விருதுநகர் மாவட்டத்தில் கூடுதல் வாக்குச் சாவடிகளை ஏற்படுத்துவது தொடர்பாக அங்கீகரிக் கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான கருத்துக் கேட்புக் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் தலைமை வகித்தார்.
அப்போது கரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக ஆயிரம் வாக்காளர்களுக்குமேல் உள்ள வாக்குச் சாவடிகளைப் பிரித்து கூடுதல் வாக்குச்சாவடிகளை ஏற்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் தற்போது 1,881 வாக்குச் சாவடிகள் உள்ளன. மாவட்டத்தில் 623 வாக்குச் சாவடிகளை கூடுதலாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான கருத்துக்களை அரசியல் கட்சியினர் வரும் 12-ம் தேதி காலை 11 மணிக்குள் தெரிவிக்கலாம். அதைத் தொடர்ந்து கூடுதல் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் தெரிவித்தார்.
கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவகாசி சார்-ஆட்சியர் ச.தினேஷ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) காளிமுத்து, தேர்தல் பிரிவு வட்டாட்சியர் அய்யக்குட்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago