ராமநாதபுரம் சக்கரக்கோட்டை பகுதியில் கடந்த ஜனவரி 21-ல் ஒரு வீட்டில் 260 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டதில் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில் ராமநாதபுரம் பள்ளி வாசல் தெருவைச் சேர்ந்த முகமது மைதீனும் (44) ஒருவர். இவர் முதுகுளத்தூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் நேற்று காலை இளம் செம்பூர் போலீஸார் முகம்மதுமைதீனை ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அப்போது அவர் திடீரெனத் தப்பினார். அதையடுத்து ஏர்வாடி பகுதியில் பதுங்கி இருந்த அவரை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், கைதி தப்பிய விவகாரத்தில் தலைமைக் காவலர் ராமபாண்டி, காவலர்கள் அன்பரசன், திராவிடசெல்வன் ஆகிய 3 பேரையும் எஸ்பி வி.கார்த்திக் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago