கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்குச்சாவடி களின் எண்ணிக்கை அதிகரிக்கப் பட்டு, 2425 வாக்குச்சாவடிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வரைவு துணை வாக்குச்சாவடி பட்டியல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை வகித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளுக் கான இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த ஜனவரி மாதம் 20-ம் தேதி வெளியிடப்பட்டது. கரோனா நோய்த்தொற்று பரவலை கருத்தில் கொண்டு எதிர் வரும் சட்டப்பேரவை தேர்தலில் 1000 வாக்காளர்களுக்கு அதிகமான வாக்குச்சாவடிகளை இனம்கண்டு துணை வாக்குச்சாவடிகள் பிரிக்க இந்திய தேர்தல் ஆணையத்தால் வழிகாட்டுதல் வழங்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முன்னதாக 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 1863 வாக்குச்சாவடிகள் செயல்பட்டு வந்தன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் கொண்ட 562 வாக்குச்சாவடிகள் புதியதாக இனம் காணப்பட்டு, தற்போது 2425 வாக்குச்சாவடிகளாக இறுதி செய்யப்பட்டுள்ளது. இறுதி செய்யப்பட்ட துணை வாக்குச்சாவடி பட்டியலானது அனைத்து அரசியல் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் ஏதேனும் மாற்றங்கள் இருப்பின் அதன் விவரத்தினை தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் டிஆர்ஓ., சதீஷ், ஓசூர் மாநராட்சி ஆணையர் செந்தில்முருகன், கோட்டாட்சியர்கள் கிருஷ்ணகிரி கற்பகவள்ளி, ஓசூர் குணசேகரன், தேர்தல் வட்டாட்சியர் ஜெய்சங்கர், அதிமுக காத்தவராயன், திமுக ரவிச்சந்திரன், ஜெயராமன், தேசியவாத காங்கிரஸ் கட்சி சந்திரமோகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago