கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை செவிலியர்கள் கூட்டமைப்பு சார்பில் தூத்துக்குடி சுகாதார பணிகள்துணை இயக்குநர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க தலைவர் பொன் சாந்தகுமாரி தலைமை வகித்தார். மினி கிளினிக்அமைக்க துணை சுகாதார மையங்களை பயன்படுத்துவதை முற்றிலுமாக கைவிட வேண்டும். மினி கிளினிக்குகளில் கிராம சுகாதார செவிலியர்களை பணி அமர்த்த வேண்டும். கிராம சுகாதார செவிலியர்களை பள்ளி தடுப்பூசி பணியில்இருந்து விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

கோவில்பட்டி

கோவில்பட்டியில் கிராம சுகாதார செவிலியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து சுகாதாரத் துறை துணைஇயக்குநர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலபொதுச் செயலாளர் பாப்பா தலைமைவகித்தார்.

தென்காசி

தமிழ்நாடு சுகாதார செவிலியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு பொது சுகாதாரத் துறைசெவிலியர் கூட்டமைப்பு சார்பில்,சங்கரன்கோவில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் லதா மங்கையர்க்கரசி தலைமை வகித்தார்.

திருநெல்வேலி

திருநெல்வேலியில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகம் முன் நடந்த தர்ணா போராட்டத்துக்கு, அமைப்பின் துணைத் தலைவர் ரேமா தலைமை வகித்தார். செயலாளர் முருகம்மாள், பொருளாளர் தங்கராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்