ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை மற்றும் பொதுமக்கள் இணைந்து நடத்தும் ‘பசுமை மாரத்தான்-2021’ ஓட்டம் வரும் 28-ம் தேதி நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக ராணிப் பேட்டை மாவட்ட காவல் துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை மற்றும் பொதுமக்கள் சார்பில் ‘பசுமை மாரத்தான்-2021’ ஓட்டம் நடத்தப்படவுள்ளது. சுற்றுச் சூழலை பாதுகாப்பதன் அவசியத்தை உணர்த்தும் நோக்கில், வரும் பிப்.28-ம் தேதி 15 கி.மீ, 10 கி.மீ., மற்றும் 5 கி.மீ., மாரத்தான் ஓட்டங்கள் நடைபெறவுள்ளன.
நுழைவுக் கட்டணம்
10 வயது முதல் 20 வயது வரையும், 20 வயது முதல் 35 வயது வரையும், 35 வயது முதல் 50 வயது வரையும், 50 வயதுக்கும்மேல் உள்ள பிரிவுகளில் மாரத்தான் ஓட்டம் நடைபெறும். ராணிப்பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தொடங்கும் மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்க ரூ.400 நுழைவுக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
4.6 லட்சம் பரிசு தொகை
மொத்த பரிசுத் தொகை ரூ.4.6 லட்சம் ஆகும். இந்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் அனைவரும் பங்கேற்கலாம்’’ என தெரி விக்கப்பட்டுள்ளது.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago