திருப்பத்தூர் ஆட்சியர் அலு வலகத்தில் தொழிலாளர் நலத் துறை சார்பில் ‘கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை’ யொட்டி கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு முறை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ஆட்சியர் சிவன் அருள் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதில், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ் மனிதனை வணிக பொரு ளாக்குதல், வலுக்கட்டாயமாக வேலை சுமத்துவது, கடன் பிணைய தொகை வழங்கி கட்டாயப் பணிக்கு வற்புறுத்து தல் உள்ளிட்ட செயல்கள் தண்டனைக்குரிய குற்றச் செயலாகும்.
கொத்தடிமை தொழிலாளர் முறையை முழுமையாக ஒழிக்கும் நோக்கத்தை கருத்தில் கொண்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கொத்தடிமை தொழிலில் யார் ஈடுபட்டிருந் தாலும் அடையாளம் கண்டு அவர்களை மீட்க வேண்டும்.
மீட்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவோம் என மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் உறுதிமொழி ஏற்க, அதனை தொடர்ந்து அரசு அதிகாரிகள் உறுதி மொழியை ஏற்றனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யா பாண்டியன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வில்சன்ராஜசேகர், தொழிலாளர் இணை ஆணையர் (அமலாக்கம்) செந்தில்குமார், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் சாந்தி, மனோகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago