திருவண்ணாமலையில் இன்று தொடங்கி வரும் 26-ம் தேதி வரை நடைபெறவுள்ள ராணுவ பணிக்கான ஆள் சேர்ப்பு முகாமில் விண்ணப்பித்துள்ளவர்களில் 80 சதவீதம் பேர் பங்கேற்பார்கள் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி வளாகத்தில் இன்று (10-ம் தேதி) முதல் வரும் 26-ம் தேதி வரை ராணுவ பணிக்கு ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதையடுத்து, முகாமில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணியை ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர், ராணுவத் துறை அதிகாரிகளிடம் தேர்வுக்கு வரும் இளைஞர்களை வழி நடத்துவது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறும்போது, “நாளை (இன்று) முதல் வரும் 26-ம் தேதி வரை ராணுவ பணிக்கு ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற வுள்ளது. இந்த முகாமில் பங்கேற்க 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பதிவு செய் துள்ளனர். இவர்களில், 80 சதவீதம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில், முகாமில் பங்கேற்பதற்கான அனுமதி அட்டை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பு ஏற்படாமல் இருக்க, தினசரி 2 ஆயிரம் நபர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படும். மைதானம் உள்ளே அனுப்பும் போது, 500 நபர்களாக அனுமதிக் கப்படுவார்கள். மற்றவர்களுக்கு நிலைப்பகுதி, காத்திருக்கும் பகுதி என பிரிக்கப்பட்டு, ஒரே இடத்தில் அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் ஒன்று கூடாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முகாம் நடை பெறும் நாட்களில் குடிநீர், உணவு, கழிப்பறை உட்பட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் மருத்துவர்கள், ஆம்பு லன்ஸ் வசதி ஆகியவை செய்து கொடுக்கப்பட்டுள்ளது. காவல் துறை சார்பில் பாதுகாப்பு வழங்கப் படும்.
ராணுவ பணிக்கான ஆள் சேர்ப்பு முகாமில் பங்கேற்கும் இளைஞர்கள், இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். இந்த முகாம் கண்டிப்பான முறையில் வெளிப் படையாக நடைபெறும். இதில், சிபாரிசு மற்றும் பணம் கொடுத்து பணியில் சேர வாய்ப்புகள் இல்லை. இடைத்தரகர்கள் அணுகினால், காவல்துறையிடம் தெரிவிக்கலாம்” என தெரிவித்தார்.
அப்போது, சென்னை ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலக இயக்குநர் கர்னல் சவுரவ் சேத்தி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago