திருப்பத்தூர் மாவட்டத்தில் பாரம்பரிய கலைகளை இளைஞர்களிடம் ஊக்குவிக்க வேண்டும் ஆட்சியர் சிவன் அருள் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மாவட்டத்தில் பாரம் பரிய கலைகளை வளர்க்கவும், இளைஞர்களிடம் உள்ள கலை ஆர்வத்தை வெளிக்கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை கலை பண்பாட்டுத்துறையினர் எடுக்க வேண்டும் என ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கலை பண்பாட்டுத் துறை சார்பில், மாவட்ட கலை மன்றத்தின் ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்துப் பேசும் போது, "தமிழகத்தில் பாரம்பரிய கலைகளை வளர்க்கும் வகையில் கலை பண்பாட்டுத் துறை 2020-21-ம் ஆண்டில் புதிதாக தொடங்கப்பட்ட 5 மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தலைமையின் கீழ் மாவட்ட கலை மன்றங்களை மேம்படுத்த ஒரு மாவட்டத்துக்கு ரூ.2 லட்சம் வீதம் 5 மாவட்டங்களுக்கு ரூ.10 லட்சத்தை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது.

புதிய மாவட்டங்களில் கலை மன்றங்கள் ஏற்படுத்த அரசு உத்தர விட்டுள்ளது. அதனடிப்படையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் மாவட்ட கலை மன்றத்தினை மேம்படுத்த இந்த ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. எனவே, திருப்பத்தூர் மாவட்டத்தில் பாரம்பரிய கலைகளை வளர்க்கும் வகையில் இக்குழுவினர் செயல்பட வேண்டும்.

குறிப்பாக, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மலைவாழ் மக்களின் பாரம்பரிய கலைகள், தெருக்கூத்து, நாடகம், நாட்டியம், இளைஞர்களிடம் உள்ள பல்வேறு கலைகளை வளர்க்கவும், அவர்களிடம் உள்ள கலை ஆர்வத்தை தூண்ட என்னென்ன செய்ய வேண்டும் என்பதை அடுத்த ஆலோசனைக்கூட்டத்தில் தெரி விக்க வேண்டும்’’ என்றார்.

இக்கூட்டத்தில் கலை பண் பாட்டுத்துறை மண்டல உதவி இயக்குநர் குமார், இந்து அற நிலையத்துறை உதவி ஆணையர் விஜயா, மாவட்ட நூலக அலுவலர் (பொறுப்பு) பழனி, உதவி சுற்றுலா அலுவலர் இளமுருகன், காஞ்சிபுரம் இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்