கடந்த 5 ஆண்டுகளில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 50% விபத்துகள் குறைந்தன வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தகவல்

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில், 50 சதவீதம் விபத்துகள் குறைந்துள்ளதாக வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தெரிவித் தார்.

கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் பள்ளியில் வட்டாரப் போக்குவரத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு மாத விழாவிவையொட்டி, ஆட்டோ ஓட்டுநர்கள், தனியார் பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கான கண் மற்றும் ரத்த பரிசோதனை நடந்தது. வட்டாரப் போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன் தலைமை வகித்தார். பள்ளியின் முதல்வர் அப்துல்ஷெரீப், தனியார் நிறுவன நிர்வாகி கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் ஆர்டிஓ பேசியதாவது:

கடந்த 5 ஆண்டுகளில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 50 சதவீதம் விபத்துகள் குறைந்துள்ளன. காப்பீடு இல்லாமல் வாகனங்களை ஓட்டாதீர்கள். காப்பீடு இல்லாத வாகனத்தினால் விபத்து நடத்தால் அதற்குறிய இழப்பீட்டுத் தொகையை நீங்கள்தான் கட்ட வேண்டும். எனவே அனைவரும் கட்டாயம் காப்பீடு எடுக்க வேண்டும்.

பள்ளி வாகனங்களை இயக்குவதற்கு முன்பு, அனைத்தும் சரியாக உள்ளதா என பரிசோதனை செய்து கொள்ளுங்கள். அது உங்களுக்கும் பள்ளி குழந்தைகளுக்கும் நல்லது. பள்ளி பேருந்து ஓட்டுநர்களின் மருத்துவ பரிசோதனையை பள்ளி நிர்வாகம் கண்காணிக்க வேண்டும். ஆட்டோ ஓட்டுநரின் சீட்டுக்கு பின்னால், ஓட்டுபவர்களின் விவரங்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். ஆட்டோக்கள் பெரும்பாலும் நகருக்குள் ஓட்டப்படுவதால், மெதுவாகவே ஓட்ட வேண்டும். உள்ளே அமர்ந்திருப்பவர்களையும், எதிரில் வருபவர்களையும் அச்சம் ஏற்படும் அளவிற்கு ஆட்டோக்களை ஓட்டக் கூடாது. எனவே விபத்துக்களை குறைக்க அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாணிக்கம், அன்புச் செழியன் உட்பட, 300-க்கும் மேற்பட்ட டிரைவர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் கண் மற்றும் ரத்தம் பரிசோதிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்