திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் உள்ள ஏழு தொகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்ட 9 வாக்குச் சாவடிகளுடன் சேர்த்து 2,103 வாக்குச் சாவடிகள் உள் ளன. ஒரு வாக்குச் சாவடியில் 1000 வாக் காளர்களுக்கு மேல் இருந்தால் அவற்றைப் பிரித்து மறு சீரமைப்பு செய்வது குறித்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோ சனை நடத்தப்பட்டது. திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்த இக்கூட்டத்துக்கு ஆட்சியர் மு.விஜயலட்சுமி தலைமை வகித்தார். அப்போது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.
கூட்டத்தில் சார்-ஆட்சியர் சிவகுரு பிரபாகரன், திண்டுக்கல் கோட்டாட்சியர் உஷா, பழநி கோட்டாட்சியர் அசோகன், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago