கிருஷ்ணகிரி அணை சாலையை சீரமைக்க வேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், நேற்று ஒன்றியக் குழு உறுப்பினர்களுக்கான சாதாரணக் கூட்டம் நடந்தது. ஒன்றியக் குழுத் தலைவர் அம்சாராஜன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமாமகேஷ்வரி, தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், தமிழக முதல்வர் ரூ.12 ஆயிரத்து 110 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்தது.
பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2500 வழங்கியது உள்ளிட்டவைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி ஒன்றியம், பச்சிகானப்பள்ளி ஊராட்சி, கிருஷ்ணகிரி அணை பாலம் முதல் அணையின் பின்புறம் வரையிலான பொதுப் பணித்துறைக்கு சொந்தமான தார்சாலை மிகவும் சேதம் அடைந்துள்ளது. இதனால் பொதுப்பணித்துறையின் மூலம் உடனடியாக தார் சாலை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago