நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன், வாக்குச்சாவடிகள் அதிகரிப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் உதகை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்தார்.கூட்டத்துக்கு பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் 683-ஆக இருந்த வாக்குச்சாவடிகள், கரோனாதொற்று பரவலால் 903-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் பேரில் வாக்குச்சாவடிகள் அதிகரிப்பு குறித்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் கலந்து ஆலோசனை செய்யப் பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் தெரிவித்த ஆட்சேபனைகளை, தேர்தல் ஆணையத்துக்கு தெரியப் படுத்துவோம்.
நீலகிரி மாவட்டத்தில் மின்னணுவாக்குப்பதிவு இயந்திரங்கள் 20 சதவீதம் கூடுதலாக உள்ளன. மின்னணு இயந்திரங்கள் முதற்கட்ட ஆய்வு செய்யப்பட்டன. இதில், பழுதானவை பெங்களூரூவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago