காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் பிப்.17-ம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடக்கம்

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் ஆண்டு பிரம்மோற்சவம் வரும் 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் உள்ள  காமாட்சியம்மன் கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவம் வரும் 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.

இதையடுத்து தொடர்துவரும் 10 நாட்களும் பல்வேறு வாகனங்களின் மீது அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். இதில், 19-ம் தேதி இரவு யானை வாகனம், 21-ம் தேதி காலை தங்கபல்லக்கு, 22-ம் தேதி தங்க கிளி, 23-ம் தேதி தேரோட்டம், 25-ம் தேதி வெள்ள தேர் உற்சவம், 27-ம் தேதி இரவு தங்க காமகோடி விமானம், 28-ம் தேதி விஸ்வருப தரிசனம் என உற்சவங்கள் நடைபெற உள்ளன.

பிரம்மோற்சவம் தொடங்க உள்ளதால், கோயில் நிர்வாகம் சார்பில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளாக கோயில் வளாகம் மற்றும் ராஜகோபுர முகப்பு பகுதிகளில் பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்