கடலூரில் துணை வாக்குசாவடி அமைப்புது குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்காளர் எண்ணிக்கை உச்சவரம்பினை 1,500-ல் இருந்து 1,000-ஆக குறைக்க உத்திரவிட்டுள்ளது. இதன் படி துணை வாக்குச்சாவடி அமைப்பது குறித்து கடலூரில் ஆட்சியர் சந்திரசேகர் சாக மூரி தலைமையில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவ டிகளில் 1,000 வாக்காளர்களுக்கு மேல் உள்ள 843 வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டன. இதற்கான துணை வாக்குச்சாவடிகள் அங்கீ கரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதி நிதிகள் முன்னிலையில் நேற்று இறுதி செய்யப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் தற்போது 9 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 2,295 வாக்குசாவடிகள் உள்ளன. இதில் 1,000 வாக்கா ளர்களுக்கு மேல் உள்ள மொத்தவாக்குச்சாவடிகள் 843 ஆகும். இதையும் சேர்ந்து கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 3,138 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும்.
இக்கூட்டத்தில் கடலூர் கோட் டாட்சியர் ஜெகதீஸ்வரன், தேர்தல் வட்டாட்சியர் பாலமுருகன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago