கடலூர் தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 2,401 பேருக்கு பணி நியமன ஆணை அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்

By செய்திப்பிரிவு

கடலூரில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு செய் யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ளபுனித வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை,வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டு மையம் இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தியது. கடலூர் ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி தலைமையில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தேர்வு பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பிற்கான பணி நியமன ஆணையினை நேற்று வழங்கினார்.

இதில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியது:

வேலை வாய்ப்பு முகாமில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 14,896 வேலை நாடுநர்கள் பங்கேற்றனர். இம்முகாமில் 171 தனியார் நிறுவனங்கள் பணியாளர்களை தேர்வு செய்துள்ளனர். இதில் தேர்வு செய்யப்பட்ட 2,401 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப் பட்டுள்ளன.

மேலும் 2,890 வேலை நாடுநர்களுக்கு இரண்டாம் கட்ட நேர் காணலுக்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. திறன் பயிற்சிக்கு விண்ணப்பித் தவர்களில் 228 பேர்பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள் ளனர் என்று தெரிவித்தார்.

மண்டல இணை இயக்குநர் (வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை) வனிதா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் எகசானலி, கடலூர் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

171 தனியார் நிறுவனங்கள் பணியாளர்களை தேர்வு செய்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்