லாரியில் தீ: துணிகள் எரிந்து சேதம்

By செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்டத்தில் இருந்து ரூ.3 கோடி மதிப்புள்ள 150 துணி பண்டல்களை ஏற்றிய கன்டெய்னர் லாரி ஒன்று டெல்லி நோக்கி புறப்பட்டது. லாரியை, பிஹார் மாநிலம் ரூபீடகா கிராமத்தைச் சேர்ந்த மகபூப் மகன் சவுகின் (27) என்பவர் ஓட்டிச் சென்றார். நேற்று முன் தினம் இரவு நள்ளிரவில் கிருஷ்ணகிரி-குப்பம் சாலையில் பர்கூர் அருகே ஆந்திர மாநில எல்லையில் சென்று கொண்டிருந்தது.

அங்குள்ள காளி கோயில் பகுதியில் துரை ஏரி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது லாரியில் இருந்து புகை வெளியேறி உள்ளது. பின் தொடர்ந்து வந்த வாகனத்தில் இருந்தவர்கள் இதுபற்றி கன்டெய்னர் லாரி ஓட்டுநரிடம் தெரிவித்தனர். உடனே லாரியை சாலையோரம் நிறுத்திய ஓட்டுநர், அருகில் இருந்தவர்கள் உதவியுடன் பர்கூர் மற்றும் கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் அளித் தார். மேலும், கந்திகுப்பம் காவல் நிலைய போலீஸாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

2 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு வந்து சேர்ந்து தீயை அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. சுமார் 1 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் தீ அணைக்கப்பட்டது. இருப்பினும், துணிகள் முழுமையாக எரிந்து சேதம் ஆனது. இந்த தீ விபத்தால் அப்பகுதியில் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீ விபத்து தொடர்பாக கந்திகுப்பம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்