பாமக-வும் அதிமுக-வும் சந்தித்து பேசுவது இட ஒதுக்கீடு தொடர்பானது தானே தவிர, தேர்தல் கூட்டணி தொடர்பாக அல்ல என்று கிருஷ்ணகிரியில் தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தேமுதிக சார்பில், 2021 சட்டப் பேரவை தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில், கட்சியின் துணை செயலாளர் சுதீஷ் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
2021 சட்டப் பேரவை தேர்தலுக் கான பணிகளை தேமுதிக சார்பில் நாங்கள் தொடங்கி விட்டோம். கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து இதுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை. வேறு எந்த கட்சிகளுமே கூட இதுவரை கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரியவில்லை. பாமக-வும் அதிமுக-வும் சந்தித்து பேசுவது இட ஒதுக்கீடு தொடர்பாகத் தானே தவிர, கூட்டணி தொடர்பாக அல்ல. 2011 சட்டப் பேரவை தேர்தலில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், வேப்பனப்பள்ளி ஆகிய இரு தொகுதிகளில் தேமுதிக வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 2021 தேர்தலிலும் அந்தத் தொகுதிகளை கேட்டுப் பெற்று போட்டியிட்டு வெற்றி பெறுவோம். அதிமுக கூட்டணியில் தான் தேமுதிக இருக்கிறது. தேமுதிக இடம்பெறும் கூட்டணி தான் 2021 சட்டப் பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு கூறினார்.
இந்நிகழ்ச்சியின்போது, மாவட்ட செயலாளர்கள் அன்பரசன்(கிழக்கு), முருகேசன் (மேற்கு) உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago