தமிழர் தேசிய முன்னணி சார்பில் ‘மக்கள் எதிர் சட்டங்கள்' என்ற தலைப்பிலான கருத்தரங்கம் திருவாரூரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அமைப்பின் பொதுச் செயலாளர் இலரா.பாரதிச்செல்வன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், புதிய வேளாண் சட்டங்கள், சுற்றுச்சூழல் சட்டத் திருத்தங்கள், புதிய கல்விக் கொள்கை ஆகிய தலைப்புகளின்கீழ் கருத்துரை நிகழ்த்தப்பட்டது.
கருத்தரங்கத்தில் பங்கேற்ற தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ.நெடுமாறன் பேசிய தாவது:
புதிய வேளாண் சட்டங்கள், உழவர்களுக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. அதனால்தான், பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநில உழவர்கள், டெல்லியில் கடுங்குளிரையும் பொருட் படுத்தாமல் போராடுகின்றனர். அவர்களை தடுக்க மத்திய அரசு எவ்வ ளவோ முயற்சித்தும், போராட் டம் தொடர்கிறது. தமிழகத்தில் அதுபோன்ற எழுச்சி ஏற்பட்டிருந் தால், 50 ஆண்டுகளாக நீடிக்கும் காவிரி பிரச்சினை, ஈழத்தமிழர் பிரச்சினை, முல்லை பெரியாறு பிரச்சினை போன்றவை எப்போதோ தீர்க்கப்பட்டிருக்கும்.
தமிழகத்தின் ஆறுகளில் மணலே இல்லாத நிலை உள்ளது. பெரிய நிறுவனங்கள் இந்தச் செயலை செய்வதற்கு, மத்திய அரசின் சுற்றுச்சூழல் சட்டங்களே துணையாக உள்ளன. இவ்வாறு இயற்கை வளங்கள் கொள்ளையடிப்பது தொடர்ந்தால், எதிர்கால சந்ததியரின் வாழ்க்கை மிகவும் மோசமாக இருக்கும்.
எனவே, இயற்கை வளங்கள் சூறையாடப்படுவதைத் தடுக்க அந்தந்த பகுதி மக்களே போராட வேண்டும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago