6-வது நாளாக அரசு ஊழியர்கள் சாலை மறியல்

By செய்திப்பிரிவு

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கடந்த பிப்.2-ம் தேதி முதல் தினமும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், 6-வது நாளான நேற்று விடுமுறை நாள் என்பதால், 'விடுமுறை நாளிலும் விடியலை நோக்கி' என்ற தலைப்பில், திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்க மாநில அமைப்புச் செயலாளர் நவநீதன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 22 பெண்கள் உட்பட 48 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இதேபோல, புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் குமரேசன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 19 பேரையும், அரியலூர் அண்ணா சிலை அருகே மாவட்டத் தலைவர் பஞ்சாபிகேசன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 38 பெண்கள் உட்பட 58 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் அண்ணா சாலையில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.கோதண்டபாணி தலைமையில் மறியலில் ஈடுபட்ட 50 பேரும், நாகை வட்டாட்சி யர் அலுவலகம் முன் பொது அலுவலக சாலையில், தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலச் செயலாளர் சித்ரா தலைமையில் மறியலில் ஈடுபட்ட 7 பெண்கள் உட்பட 22 பேரையும், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர் இளவரசன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 15 பெண்கள் உட்பட 25 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்