தென்காசி மாவட்டம், கடையம் பெரும்பத்து ஊராட்சி வெய்க்காலிப்பட்டியில் அஞ்சல்துறை சார்பில் ஆதார் சேவை சிறப்பு முகாம் நடைபெற்றது. 6 நாட்கள் நடைபெற்ற முகாமில் முதல் 3 நாட்கள் பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் 3 நாட்கள் பொதுமக்களுக்கும் ஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட திருத்தங்களை செய்து கொண்டனர்.
வெய்க்காலிப்பட்டி புனித ஜோசப் உயர்நிலைப்பள்ளி தாளாளர் அருட்திரு லியோ தலைமை வகித்தார். கோவில்பட்டி கோட்ட அஞ்சலக முதுநிலை கண்காணிப்பாளர் பாண்டியராஜ் தொடங்கிவைத்தார். தென்காசி அஞ்சலக உபகோட்ட ஆய்வாளர் ஜோதி, வணிக அலுவலர் சங்கரநாராயணன், போஸ்ட் மாஸ்டர் குலசேகரன் மற்றும் அரிமா சங்க நிர்வாகிகள் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். பள்ளித் தலைமை ஆசிரியர் ெஹன்றி நன்றி கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago