மறியலில் ஈடுபட்ட 145 அரசு ஊழியர்கள் கைது

By செய்திப்பிரிவு

தி.மலையில் 6-வது நாளாக நேற்று நடைபெற்ற சிறை நிரப்பும் போராட்டத்தில் பங் கேற்ற 145 அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், தி.மலையில் கடந்த 2-ம் தேதி முதல் தொடர் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்று வருகிறது. 6-வது நாளாக நேற்று போராட்டம் நடைபெற்றது. அண்ணா சிலையில் இருந்து அரசு ஊழியர்கள் ஊர்வலமாக புறப்பட்டு சென்று பெரியார் சிலை முன்பு சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். ஆனால், அவர்களை வழியிலேயே காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.

இதனால், அண்ணா சாலையில் அரசு ஊழியர்கள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசுத் துறைகளில் உள்ள 4.5 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக அறிவித்து ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியு றுத்தி முழக்கமிட்டனர்.

இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட 145 அரசு ஊழியர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்