தமிழக விவசாயிகள் பாதுகாப்புசங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் நல்லாக்கவுண்டர், திருப்பூரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, "மத்திய அரசு நிறைவேற்றியுள்ள 3 வேளாண் திருத்தசட்டங்களை எதிர்த்து, இரண்டரை மாதங்களாக விவசாயிகள் போராடி வருகிறார்கள். போராட்டத்தை சிதைக்கும் நோக்கில், டிராக்டர் பேரணியில் மத்திய அரசே வன்முறையாளர்களை ஏவிவிட்டு, விவசாயிகளுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியது. டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்துக்கு, மற்ற மாநில விவசாயிகளிடம் ஆதரவு இல்லை என்று கூறுவது தவறான பிரச்சாரம்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்புசங்கம் சார்பில், ஒவ்வொரு விவசாயி தோட்டத்தில் இருந்தும்10 தேங்காய்கள் வீதம் ஒரு லட்சம் தேங்காய்களை டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்துக்கு அனுப்பி வலுப்படுத்துவதென தீர்மானித்துள் ளோம். இதை ஒரு வாரத்துக்குள் செய்ய உள்ளோம். கோவை, திருப்பூர் மாவட்ட பகுதிகளில் தேங்காய் சேகரிக்கும் பணி தொடங்கியுள்ளது. டெல்லியில் நெல், கோதுமை மற்றும் காய்கறிகள் விளைகின்றன. ஆனால், தேங்காய்விளைச்சல் இல்லை. ஆகவே, தமிழக விவசாயிகளின் பங்களிப்பாக தேங்காய்களை டெல்லிக்கு அனுப்பும் விழாவை நடத்த உள்ளோம். இதையடுத்து, தமிழகத்தில் இருந்து 100 பேர் டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்கிறோம்" என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago