மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம் ஆகிய 3 இடங்களில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் மாவட்ட கிளை சார்பில் சாலை மறியல் நடைபெற்றது.
கடலூரில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். காங்கிரஸ் மாநில செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ராஜேஷ்கண்ணன், மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் பாலு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு குளோப், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் செந்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட இணைச் செயலாளர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 3 இடங்களிலும் சாலை மறியல் செய்த 150 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம்
விழுப்புரம் - திருச்சி நெடுஞ் சாலையில் காங்கிரஸ் கட்சியின் மாநில விவசாய அனியின் துணை செயலாளர் சிறுவை ராமமூர்த்தி தலைமையில் காங்கிரஸார் நேற்றுமாலை சாலைமறியலில் ஈடுபட் டனர். தகவலறிந்த விழுப்புரம் மேற்கு போலீஸார் அங்கு சென்று 11 பெண்கள் உட்பட 85 பேரை கைது செய்தனர்.இதேபோல் செஞ்சி ஒழுங்கு முறை விற்பனைக்கூடம் எதிரேநேற்று விழுப்புரம் வடக்கு மாவட்டத் தலைவர் ரமேஷ் தலை மையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் அனைத்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் ஏ.வி.ஸ்டாலின் மணி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 25 பேரை போலீஸார் கைது செய்தனர்.
புதுச்சேரி
புதுச்சேரி அண்ணா சிலை அருகே அகில இந்திய விவசாயிகள் சங்கத்தினர் தலைவர் கீதநாதன் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்டவர்களை ஒதியஞ்சாலை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago