தை அமாவாசையை முன்னிட்டு பிப்.9 முதல் 12 வரை சதுரகிரிக்கு செல்ல அனுமதி

By செய்திப்பிரிவு

தை அமாவாசையை முன்னிட்டு இம்மாதம் 9-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி யளிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்- மதுரை மாவட்ட எல்லைப் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சதுரகிரி மலை. இங்கு பிரசித்திபெற்ற சுந்தர மகாலிங்க சுவாமி கோயில் மற் றும் சந்தன மகாலிங்க சுவாமி கோயில் அமைந்துள்ளன. மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களையொட்டி 4 நாட்களுக்கு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர். பிப்.9-ம் தேதி பிரதோஷமும், 11-ம் தேதி தை அமாவாசை வழிபாடும் நடைபெறுகிறது. இதையொட்டி பிப்.9-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை பக்தர்கள் சதுரகிரி மலைக்குச் செல்ல கோயில் நிர்வாகமும் வனத்துறையும் அனுமதி அளித் துள்ளன.

இந்த நாட்களில் காலை 6.30 மணி முதல் பகல் 1 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர். இரவு நேரத்தில் மலையில் தங்குவதற்கு அனுமதியில்லை. உடல் வெப்பநிலை பரிசோதனை செய்த பின்னரே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தை அமாவாசையையொட்டி வில்லிபுத்தூர், ராஜபாளை யம், விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, மதுரை, திருமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து சதுரகிரி மலையடிவாரப் பகுதியான தாணிப்பாறை வரை 200-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்