ராமநாதபுரத்தில் நடந்த மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டியில் 120 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
ராமநாதபுரம் மாவட்ட இறகுப்பந்து கழகம் சார்பில் மாவட்ட அளவிலான சப்-ஜூனியர் மற்றும் ஜூனியர் பிரிவுகளுக்கான இறகுப்பந்து போட்டி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ராமநாதபுரம் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
போட்டியினை ராமநாதபுரம் மாவட்ட இறகுப்பந்து கழகத்தின் செயலாளர் டி.பிரபாகரன் மற்றும் துணைத் தலைவர் வழக்கறிஞர் எம்.அசோக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 120 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் செந்தில்குமார், மாவட்ட இறகுப்பந்து கழகத்தின் மூத்த துணைத் தலைவர் கே.பாஸ்கரன், இணைச் செயலாளர் வள்ளல் காளிதாஸ் ஆகியோர் வெற்றிபெற்றோருக்கு பரிசளித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago