3 அரசுப் பள்ளிகளுக்கு தமிழக அரசின் விருது

By செய்திப்பிரிவு

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சார்பில், ஆண்டுதோறும் சிறப்பாக செயல்படும் அரசுப் பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, 2018-2019 கல்வி ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில், திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி கோபாலசமுத்திரம் நகராட்சி நடுநிலைப் பள்ளி, வலங்கைமான் ஒன்றியம் வேடம்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, நன்னிலம் ஒன்றியம் தென்கரை மாத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆகியவற்றுக்கு சிறந்த பள்ளிகளுக்கான விருதுகள் கிடைத்துள்ளன.

இதையடுத்து, சிறந்த பள்ளிகளுக்கான விருதுகளை அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமன் கடந்த பிப்.4-ம் தேதி வழங்கினார். இந்நிகழ்வில், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் பங்கேற்றனர். விருதுபெற்ற மன்னார்குடி, வேடம்பூர் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கிளாஸ் மூலம் ஆன்லைன் வகுப்புகள், கணினி ஆய்வகம், கிராமக் கல்வி மேம்பாடு, கல்வி உதவித்தொகைக்கான போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி, பெண் குழந்தைகள் தற்காப்புக் கலை பயிற்சி ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டிருந்தது.

இதுகுறித்து மன்னார்குடி பள்ளித் தலைமையாசிரியர் மா.தேவி, வேடம்பூர் பள்ளித் தலைமையாசிரியர் ஞா.தேன்மொழி ஆகியோர் கூறியபோது, “கிராமப்புற மாணவர் களுக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், எங்கள் பள்ளிகளின் ஆசிரியர்கள் ஒற்றுமையாக செயல்பட்டதால், இந்த விருது சாத்தியமாகியுள்ளது” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்