திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள தீராம்பட்டியில் புனித வனத்து அந்தோனியார் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 783 காளைகள் பங்கேற்றன.
இதையடுத்து வாடிவாசலில் இருந்து அவிழ்த்துவிடப்பட்ட காளைகள் மைதானத்தில் சீறிப் பாய்ந்தன. களத்தில் நின்ற 269 வீரர்கள் காளைகளை அடக்க முயற்சி செய்தனர். அப்போது மாடுகள் முட்டியதில் வீரர்கள் 17 பேர், பார்வையாளர்கள் 3 பேர், காளை உரிமையாளர்கள் 5 பேர் என 25 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கு அமைக்கப் பட்டிருந்த தற்காலிக மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப் பட்டது. பலத்த காயமடைந்த 5 பேர் மட்டும் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மாதாக்கோட்டையில்...
தஞ்சாவூர் அருகே மாதாக் கோட்டையில் உள்ள லூர்து மாதா கோயிலில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட் டங்களில் இருந்து 562 காளைகள் பங்கேற்றன. காளைகளைப் பிடிக்க 350 மாடுபிடி வீரர்கள் களம் இறங்கினர்.ஜல்லிக்கட்டு போட்டியை ஆட்சியர் ம.கோவிந்தராவ், தஞ்சாவூர் சரக டிஐஜி ரூபேஸ்குமார் மீனா, எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்சய் ஆகியோர் தொடங்கிவைத்தனர். இதில், காளைகளை அடக்க முயன்ற வீரர்கள், காளை உரிமையாளர்கள் என 25 பேர் காயமடைந்தனர். அவர்களில் 8 பேர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago