சாகுபடி செலவை குறைக்க வலியுறுத்தி உழவர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

வேளாண் உற்பத்திக்கான சாகுபடி செலவை குறைக்க வலியுறுத்தி உழவர் பேரவை சார்பில் திரு வண்ணாமலை மாவட்டம் செய் யாறு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உழவர் பேரவை மாவட்டத் தலைவர் புருஷோத்தமன் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசும்போது, “தமிழக அரசு அறிவித்துள்ள விவசாய கடன் தள்ளுபடி என்பது விவசாய வீழ்ச்சிக்கு நிரந்தர தீர்வாகாது. வேளாண் உற்பத்திக்கான சாகுபடி செலவை குறைக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண் விளை பொருட்களின் விலை கடந்த 50 ஆண்டுகளில் 20 மடங்கு உயர்ந்துள்ளது. சாகுபடி செலவும் 150 மடங்கு உயர்ந்துவிட்டது. இதுபோன்ற காரணங்களால் விவசாயம் வீழ்ச்சி அடைந்துள்ளது. எனவே, சாகுபடி செலவை குறைக்க வேண்டும்.

மேலும், உள்ளூர் விவசாயிகள் உற்பத்தியை கொள்முதல் செய்து ரேஷன் மூலமாக வழங்க வேண்டும். மீனவர்களுக்கு டீசல் மானியம் வழங்குவது போல், விவசாயிகளுக்கு ஓர் ஏக்கருக்கு 10 லிட்டர் டீசல் வழங்க வேண்டும். உயிர் காக்கும் மருந்து போல், பயிர் காக்க மருந்து மானியம் வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களை விவசாயப் பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

கடந்த 1970-ல் ஓர் ஏக்கருக்கு ரூ.160 என்றிருந்த சாகுபடி செலவு, 2020-ல் ரூ.24 ஆயிரமாக உயர்ந்துள்ளது. சாகுபடி செலவை குறைக்கும் வகையில் இடுபொருள், டீசல், விதை மற்றும் கூலியை வழங்கினால் விவசாயம் லாபம் பெறும்” என்றார். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் முழக்கமிட்டனர்.

முன்னதாக, விவசாய சங்க பெருந்தலைவர் நாராயணசாமி பிறந்தநாளையொட்டி, அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், பாரம்பரிய முறையில் பனை ஓலையில் கூழ் ஊற்றி குடித்து விழிப்புணர்வு ஏற்படுத் தப்பட்டது.

உயிர் காக்கும் மருந்து போல், பயிர் காக்க மருந்து மானியம் வழங்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்