வேலூர் மாவட்டத்தில் ரூ.49.54 கோடியில் 4,133 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் ஆட்சியர் சண்முகசுந்தரம் வழங்கினார்

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தில் 4,133 பயனாளிகளுக்கு ரூ.49.54 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் வழங்கினார்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலத்துறை, மகளிர் திட்டம் சார்பில் 4,133 பயனாளிகளுக்கு ரூ.49.54 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடை பெற்றது. மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கே.வி.குப்பம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.லோகநாதன், மாவட்ட வேளாண் விற்பனைக்குழு தலைவர் எஸ்.ஆர்.கே.அப்பு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மகளிர் திட்ட அலுவலர் சிவராமன், சமூக நல அலுவலர் முருகேஷ்வரி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு ஆகியோர் திட்ட விளக்கவுரை நிகழ்த்தினர்.

இந்த நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பேசும் போது, ‘‘வேலூர் மாவட்டத்தில் படித்த ஏழை பெண்கள், பட்டம் படித்தவர்களுக்கு அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. திட்ட உதவிகளை பெற்று பயனாளிகள் பயன்பெற வேண்டும்.

அரசின் பல்வேறு திட்டங்களால் பெண்கள் சமுதாயத்தில் சொந்த காலில் நிற்க வழிவகை செய்யப் பட்டுள்ளது. இதற்காக, மகளிர் குழுவினருக்கு சுழல் நிதி வழங் கப்படுகிறது’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்