காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே உள்ள மதூர் கல்குவாரியில் 2 நாட்களுக்கு முன்பு மண் சரிவு ஏற்பட்டது. இதில் வாலாஜாபாத் நத்தாநல்லூரைச் சேர்ந்த மணிகண்டன்(25), ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தசோனு அன்சாரி(24) ஆகியோர்உயிரிழந்தனர். ஒருவர் காய மடைந்தார். கடந்த 2 நாட்களாக சரிந்த மண்ணை அப்புறப்படுத் தும் பணி நடைபெற்றது. தொடர்ந்து மண் சரிவு ஏற்பட் டதால் இந்தப் பணியில் தொய்வு ஏற்பட்டது. 3-வது நாளாக நடை பெற்ற மீட்பு பணியில் மண் சரிவுக்குள் சிக்கி இருந்த 5 வாகனங்கள் மீட்கப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago