பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்சார்பில் திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று 4-வது நாளாக நடந்த சாலை மறியல் போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராணி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கருவூலம் மூலமாக ஊதியம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா பணி பார்க்கும் அனைத்து துறை ஊழியர்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும். அரசுத் துறைகளில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உட்படபல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மறியலில் ஈடுபட்ட 108 பெண்கள் உட்பட 172 பேரை கைது செய்து, தனியார் மண்டபத்தில் போலீஸார் தங்கவைத்தனர்.
கோவை
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நேற்று 4-வது நாளாக முற்றுகையிட்டு அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை ஆட்சியர் அலுவலகம் முன் சாலையில் அமர்ந்து, கோரிக்கைகள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியும், கோரிக்கை வலியுறுத்தி கோஷமெழுப்பியும் போராட்டம் நடத்தினர். பின்னர், மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை ரேஸ்கோர்ஸ் போலீஸார் கைது செய்தனர்.
உதகை
நீலகிரி மாவட்டம் உதகையிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் முத்துகுமார் தலைமையில், கோரிக்கைகளை வலியுறுத்திஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 13 பெண்கள் உட்பட 51 பேர் கைதுசெய்யப்பட்டனர்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago