கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரியில், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணைத் தலைவர் சிவராஜ் தலைமை வகித்தார். இதில், மாவட்ட செயலாளர் பழனி, மாநில குழு உறுப்பினர்கள் சின்னசாமி, கண்ணு, அகில இந்திய விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சேகர், மாநில குழு உறுப்பினர்கள் வெங்கடாஜலம், மங்கம்மா, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட நிர்வாக குழு சுபத்திரா உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து முழக்கங்கள் எழுப்பினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago