காலபைரவர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி அருகே காலபைரவர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை யொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

கிருஷ்ணகிரி அருகே உள்ள கல்லுக்குறிக்கி பெரியஏரி மேற்கு கோடியில் உள்ள காலபைரவர் கோயிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. காலை, 7 மணிக்கு கணபதி ஹோமம், அஷ்டதிக்பதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், காலபைரவ மஹா ஹோமம், பூர்ணாஹூதி, காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆகியவை நடைபெற்றது. 12 மணிக்கு, கால பைரவர் உற்ஸவமும், பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில், ஏராளமான பெண்கள் பூசணியில் விளக்கேற்றி நேர்த்திக் கடன் செலுத்தினர். கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இதே போல், கிருஷ்ணகிரி அடுத்த சூரன்குட்டையில் உள்ள தட்சிண காலபைரவர் கோயிலில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தன. இதில் சூரன் குட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்