விழுப்புரம் மாவட்டத்தில் திடக்கழிவுகளை அகற்றுவதில் கூடுதல் கவனம் தேவை உள்ளாட்சி துறையினருக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத் தில் திடக்கழிவு மேலாண்மை பணிகளின் முன்னேற்றம் குறித்து சிறப்பு கண்காணிப்பு குழுக்கூட்டம் நேற்று ஆட்சியர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஆட்சியர் பேசியது:

விழுப்புரம், திண்டிவனம் நக ராட்சிகள் மற்றும் மாவட்டத்தின் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகளை, பொது இடங்களில் கொட்டுவதை தவிர்க்க குப்பை தொட்டிகளை அமைத்து குவியும் குப்பைகளை அன்றாடம் நகராட்சி பணியாளர்களை கொண்டு அகற்ற வேண்டும்.

நகர்ப்புற கடை உரிமையாளர் களிடம் தேவையற்ற பொருட்களை கடைவீதிகளில் கொட்டுவதை தவிர்த்து குப்பை தொட்டிகளை உபயோகிக்க அறிவுறுத்த வேண்டும்.

பிளாஸ்டிக் பைகளை கடைக ளில் பதுக்கி வைத்திருந்தால் அவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உரிய அனுமதியின்றி பொது இடங்களில் விளம்பர பதாகைகள் வைப்பவர்கள் மீது நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும். குப்பைகளை தெருக்களில் அல்லது கடைவீதிகளில் கொட்டுபவர்கள் மீதும் மக்கள் நடைபாதையை ஆக்கிரமிப்பவர்களின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிராமப்புற பகுதிகளில் பேருந்துநிறுத்தங்கள், கிராமப்புற பள்ளிகள், அங்கன்வாடி மைய கட்டிடங்கள், ரேஷன் கடைகள், கிராமப்புற வீதிகள் உள்ளிட்ட பொது இடங் களை அவ்வப்போது தூய்மைப் பணியாளர்களை கொண்டு சுத்தம் செய்திட வேண்டும். கிராமங் களில் அமைந்துள்ள நீர்த்தேக்க தொட்டிகளை சுழற்சி முறையில் தொடர்ந்து சுத்தம் செய்து சுகா தாரமான குடிநீர் வழங்கப்பட வேண்டும்.

அரசு, தனியார் மருத்துவ மனைகள் மருத்துவ திடக்கழிவு களை மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், தனி இடங்களில் குப்பைத்தொட்டிகள் அமைத்து பராமரிக்க அறிவுறுத்த வேண்டும். இதுகுறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று கூறினார்.

இக்கூட்டத்தில் விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் ராதா கிருஷ்ணன், முதுநிலை நீதிபதி சங்கர், சுகாதார பணிகள் துணை இயக்குநர் செந்தில்குமார், மாவட்டமுதன்மை கல்வி அலுவலர் கிருஷ் ணப்பிரியா, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ராஜாஉள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்