கிளியனூரில் குடிநீர் தட்டுப் பாட்டை நீக்கக்கோரி தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.
வானூர் அருகே கிளியனூர்கிராமத்தில் குடிநீர் பற்றாக் குறையை நீக்க விரைந்து நடவ டிக்கை எடுக்க வேண்டும். வானூர்ஒன்றியம் முழுவதும் உள்ள குடிநீர்பற்றாக்குறையை போக்க கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யக்கோரியும் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் நேற்று கிளியனூர் கடைவீதியில் சாலை மறியல் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாய சங்க வட்டசெயலாளர் மாசிலாமணி தலைமைதாங்கினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஏ.வி. சரவணன், தமிழ்நாடு விவ சாய சங்க மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி, மாவட்ட தலைவர் சகாப்புதீன் உள்ளிட்ட 50-க்கும்மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இவர்களை கிளையனூர் போலீ ஸார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago