விருதுநகர் பஜாரில் பேருந்து இயக்க தடை கோரி வியாபாரிகள் கடை அடைப்பு-சாலை மறியல்

By செய்திப்பிரிவு

விருதுநகர் பஜாருக்குள் பேருந்து கள் இயக்கப்படுவதைக் கண்டித்து வியாபாரிகள் கடைகளை அடைத்து மறியலில் ஈடுபட்டனர்.

விருதுநகர் பராசக்தி மாரியம் மன் கோயிலில் இருந்து தெப்பம் வரை மெயின் பஜாரில் இருபுறமும் 400-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. மதுரை- சாத்தூர் மாநில நெடுஞ்சாலையாக இருந்த பஜார் சாலையில் அதிக மக்கள் நடமாட்டம் காரணமாக பல ஆண்டுகளாகப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இந்நிலை யில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் பஜார் சாலை வழியாகப் பேருந்துகள் இயக்கப் பட்டன. இதனால் பஜார் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகக் கூறி, வியாபாரிகள் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், பஜார் வழியாக பேருந்து போக்குவரத்துக்குத் தடை விதிக்கக்கோரியும், பேருந்து களை முன்பு சென்றதுபோல் ஆத்துப்பாலம் வழியாக இயக்கக் கோரியும், போக்குவரத்து உதவி ஆய்வாளரைக் கண்டித்தும் கடைகளை அடைத்து நேற்று பஜார் சாலையில் அமர்ந்து வியாபாரிகள் மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களிடம், மேற்குக் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சம்பத் மற்றும் போலீஸார் பேச்சு வார்த்தை நடத்தினர். இப்பிரச் சினை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். அதையடுத்து, பஜார் வழியாக பேருந்துகள் இயக்கத் தடை விதிக்கக்கோரி பஜார் வியாபாரிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் நேற்று மனு அளித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்