திருப்பத்தூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

காவல் துறையை கண்டித்து, அனைத்து விவசாய சங்கங் கள் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நேற்று நடை பெற்றது. திருப்பத்தூர் வட்டாட் சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் முல்லை தலைமை வகித்தார். சிபிஐ மாவட்டச்செயலாளர் சாமிக்கண்ணு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதில், கடந்த குடியரசு தினத் தன்று புதுடெல்லி மற்றும் திருவாரூரில் நடைபெற்ற டிராக்டர் பேரணியில் பங்கேற்ற விவசாயிகள் மீது பொய் வழக்குப்பதிவு செய்தும், விவசாயிகள் மீது தடியடி நடத்திய காவல் துறையினரை கண்டித்தும் முழக்கம் எழுப்பப்பட்டது.

பிறகு, அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட பொய் வழக்கை காவல் துறையினர் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர்.

மேலும், விவசாயிகளின் விளை பொருட்களை வணிக ஊக்குவிப்புக்கான அவசர சட்டம், விவசாயிகளுக்கு விலை உத்திரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசர சட்டம், அத்தியாவசியப் பொருட்கள் அவசர சட்டம், மின்சார திருத்த சட்டம் ஆகிய மசோதாக்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், சிபிஐ மாவட்ட துணைச்செயலாளர் நந்தி, நகரச்செயலாளர் சுந்தரேசன், விவசாய சங்க பிரதிநிதிகள் லட்சுமணராஜா, ஜெயராமன், காமராஜ், ஆனந்தன், வீரபத்திரன், சம்பத்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்