முஸ்லிம் மகளிர் மேம்பாட்டு சங்கத்துக்கு நிதியுதவி வழங்கலாம் திருப்பத்தூர் ஆட்சியர் சிவன் அருள் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மாவட்டத்தில் சிறுபான்மையினர் முஸ்லிம் மகளிர் மேம்பாட்டுக்காக அமைக்கப்பட் டுள்ள சங்கத்துக்கு பொதுமக்கள் நன்கொடை வழங்கலாம் என ஆட்சியர் சிவன் அருள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில், "முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த ஆதர வற்ற, கணவரால் கைவிடப்பட்ட, ஏழ்மை நிலையில் உள்ள வயதான பெண்களுக்கு நலத்திட்ட உதவி கள் வழங்கவும், அவர்களை மேம்படுத்த, அவர்களின் குழந்தை களின் கல்வி முன்னேற்றத்துக்கு உதவிடும் வகையில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் ‘திருப்பத்தூர் மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம்’ உருவாக்கப்பட்டுள்ளது.

இச்சங்கத்தின் வளர்ச்சிக்காக சமூக ஆர்வலர்கள், அறிஞர் பெருமக்கள், சிறு மற்றும் பெரு வணிக நிறுவன உரிமையாளர்கள், சான்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என விருப்பமுள்ளவர்கள் மத்திய, மாநில அரசு விதிகளுக்கு உட்பட்டும், வருமானவரி சட்டத்துக்கு உட்பட்டும் நன்கொடைகள் வழங்கலாம். மேலும், வெளிநாடு வாழ் இந்தியர்களும் நிதியுதவி வழங்கலாம்.

நன்கொடை செலுத்த வேண்டிய விவரம் ‘TIRUPATTUR MUSLIM WOMEN AID SOCIETY’ வங்கி கணக்கு எண் : 6976162196, IFSC code : IDIB000T07, இந்தியன் வங்கி, காந்திப்பேட்டை, திருப்பத்தூர்.

சங்கத்தால் சேகரிக்கப்படும் நிதி ஆதாரத்துக்கு ஏற்ப இணையாக தமிழக அரசும் ஆண்டுதோறும் 1:2 என்ற விகிதாச்சார அடிப்படையில் நிதி வழங்கும்.

இதன் மூலம் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த ஏழ்மை நிலையில் உள்ளூர் முஸ்லிம் பெண்களின் வாழ்வாதாரம் உயரும்’’ என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்