தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட வேண்டும் வடமேற்கு மண்டல துணை இயக்குநர் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

தீயணைப்பு வீரர்கள் விபத்து நேரங்களில் திகைத்து நிற்காமல் துரிதமாக செயல்பட வேண்டும் என வடமேற்கு மண்டல தீயணைப்பு துணை இயக்குநர் மீனாட்சி விஜயகுமார் தெரிவித்தார்.

வேலூரில் தமிழ்நாடு தீயணைப்போர் பாதுகாப்பு கருத்த ரங்கம் நேற்று நடைபெற்றது.

இதனை, வடமேற்கு மண்டல தீயணைப்பு துணை இயக்குநர் மீனாட்சி விஜயகுமார் தொடங்கி வைத்துப் பேசும்போது, ‘‘தீய ணைப்பு வீரர்கள் விபத்து நடந்தவுடன் அந்த இடத்துக்கு விரைந்து செல்ல வேண்டும். தன் உயிரையும் பார்க்காமல் காப்பாற்றுவதுதான் நமது முதல் குறிக்கோள். ஓய்வு என்பது நமக்கு கிடையாது.

ஒரு விபத்து நடந்தால் அங்கு தீயணைப்பு வீரர்கள் சென்றதும் மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை பிறக்கிறது. அங்கு நாம் என்ன செய்யப்போகிறோம் என்று திகைத்து நிற்கக்கூடாது.

துரிதமாக செயல்பட வேண்டும்’’ என்றார். இதில், தீயணைப்பு அலுவலர்கள் வீரர்கள் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்