மாற்றுத்திறனாளர் நலன் விரும்பும் சக்சம் தேசிய அமைப்பின் திருப்பூர் மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வம், மாவட்ட தலைவர் ரத்தினசாமி ஆகியோர் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ஜெயபிரகாஷிடம் அளித்த மனுவில், "மத்திய அரசின் தனித்துவ அடையாள அட்டை மூலமாக, திருப்பூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளர்கள் சில சிறப்பு சலுகைகளை பெற இயலும் என்ற நிலை உள்ளது. அந்த தனித்துவ அடையாள அட்டை பெறுவதற்காக, தன்னார்வ அமைப்பும் உதவி செய்து முயற்சிகளை எடுத்து வருகிறது. தற்போது, தமிழக அளவில் திருப்பூர் மாவட்டத்தில் 6000-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவ அடையாள அட்டைகள் வரப்பெற்றுள்ளன. ஆனால், அந்த அட்டைகள் பட்டுவாடா செய்யப்படாமல் உள்ளன. மூன்று மாதங்களுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு முன்னரே, அனைத்து மாற்றுத்திறனாளர்களுக்கும் இந்த அடையாள அட்டையை விநியோகம் செய்யும் நடவடிக்கையை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago